Print this page

பிரசார போதனாமுறை பள்ளிக்கூடம். குடி அரசு - அறிவிப்பு - 31.05.1931 

Rate this item
(0 votes)

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களை பிரசாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்கு பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம். அந்தப்படி அவ்வப்போது தனித்தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்று போனார்கள் என்றாலும் ஒரு முறையாக வைத்து அப்போதனாமுறை பயிற்சி செய்யப்படவில்லை . 

ஆனால் இப்போது இந்த ஜூன் 15 தேதியில் இருந்து முறை யாகவே பள்ளிக்கூடப்பயிற்சி முறையில் ஒரு பயிற்சி சாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20, 25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக் கூடும். ஆதலால் வர இஷ்டமுள்ளவர்கள் தயவு செய்து 8 உக்குள் இவ் விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப் படுகிறார்கள், 

விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவிலுள்ள சுய மரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும். 

குடி அரசு - அறிவிப்பு - 31.05.1931

Read 93 times